துணிந்து களமாடிய பெருமக்கள்…! பணிந்து பின்வாங்கிய பிரதமர் – திருமாவளவன்
துணிந்து களமாடிய பெருமக்கள். பணிந்து பின்வாங்கிய பிரதமர். அதிகார மமதையை அடியோடு புரட்டிய உழவர் குடிகளின் உன்னத அறப்போர் என திருமாவளவன் ட்வீட்.
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் ரூ. 42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட இருந்தார். இந்த நிகழ்ச்சிக்காக நேற்று பஞ்சாப் சென்ற பிரதமர், விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல இருந்தார். ஆனால், மோசமான வானிலை கரணமாக ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு சாலை மார்க்கமாக பிரதமர் சென்றார்.
அப்போது, பதிண்டா என்ற இடத்தில் மேம்பாலத்தில் ஏராளமான போராட்டக்காரர்கள் சாலையை மறித்ததால் 20 நிமிடங்கள் பிரதமரின் வாகனம் நின்றது. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பஞ்சாப் காவல்துறை மேற்கொள்ளாததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து திருமாவளவன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘துணிந்து களமாடிய பெருமக்கள். பணிந்து பின்வாங்கிய பிரதமர். அதிகார மமதையை அடியோடு புரட்டிய உழவர் குடிகளின் உன்னத அறப்போர். எளியோர் உழைப்பை ஏய்த்துப் பிழைக்கலாம்! எகிறினால் எதிர்ப்பை என்செய்ய இயலும்? பாடம் புகட்டியது பஞ்சாப்! துணிந்தால்.. பறக்கும் அம்மியும் பஞ்சாய்!’ என பதிவிட்டுள்ளார்.
#பஞ்சாப்: துணிந்து களமாடிய பெருமக்கள். பணிந்து பின்வாங்கிய பிரதமர்.
அதிகார மமதையை
அடியோடு புரட்டிய
உழவர் குடிகளின்
உன்னத அறப்போர்.எளியோர் உழைப்பை
ஏய்த்துப் பிழைக்கலாம்!
எகிறினால் எதிர்ப்பை
என்செய்ய இயலும்?பாடம் புகட்டியது பஞ்சாப்!
துணிந்தால்..
பறக்கும் அம்மியும் பஞ்சாய்! pic.twitter.com/4ghIiTSsxw— Thol. Thirumavalavan (@thirumaofficial) January 6, 2022