#Breaking:அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்!
விருதுநகர்:அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றசாட்டு வைக்கப்பட்டது.அதன்பின்னர்,பணமோசடி செய்த புகாரில் முன்ஜாமீன் கோரியை மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 17-ஆம் தேதி தள்ளுபடி செய்ததால் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருந்தார்.
இதனால்,ராஜேந்திர பாலாஜியை பல்வேறு பகுதிகளில் தனிப்படை காவல்துறையினர் தேடி வந்தனர்.சுமார் 20 நாட்களாக 8 தனிப்படை காவல்துறையினர் தேடி வந்த நிலையில்,நேற்று மதியம் ராஜேந்திர பாலாஜி காவல்துறையிடம் சிக்கினார்.அதன்படி,காரில் சென்றுகொண்டிருந்த ராஜேந்திர பாலாஜியை தனிப்படை காவல்துறையினர் மடக்கி பிடித்ததாக கூறப்படுகிறது.
ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர இருந்த நிலையில்,கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் வைத்து தமிழக காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்டார்.இதனையடுத்து,கைது செய்யப்பட்டுள்ள ராஜேந்திர பாலாஜியை தமிழகம் அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,அவர் நள்ளிரவில் விருதுநகர் அழைத்து வரப்பட்டார். இதனைத் தொடர்ந்து,அவரிடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில்,ராஜேந்திர பாலாஜி தற்போது விருதுநகர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரம்பீர் அவர்கள் முன் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். ராஜேந்திர பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க தமிழக காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் அனுமதி கேட்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில்,ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து விருதுநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட அதிமுகவினர் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.