வார இறுதி நாட்கள்… வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை – அரசு முக்கிய அறிவிப்பு!
தமிழக்கதில் வெள்ளி,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என அரசு அறிவிப்பு.
தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக,இன்று முதல் இரவு நேர ஊரடங்கு(இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அந்த வகையில்,வெள்ளி,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.அதன்படி,வார இறுதி நாட்களான நாளை,மற்றும் சனி,ஞாயிறு (ஜனவரி 7,8,9)ஆகிய கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.
மேலும்,அரசியல் கூட்டங்களுக்கு தற்போதுள்ள தடை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமில்லாமல் அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல்,கலை விழாக்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.