பிக் பாஷ் T20லீக்- ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்லுக்கு கொரோனா..!
பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பிக் பாஷ் லீக்கில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனாக மேக்ஸ்வெல் உள்ளார். கடந்த திங்கள்கிழமை இரவு மேக்ஸ்வெல்லுக்கு ஆன்டிஜென் சோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் கொரோனா பாசிட்டிவ் என்று வந்துள்ளார். க்ளென் மேக்ஸ்வெல் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஆர்டி-பிசிஆர் சோதனையும் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை, மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் 12 வீரர்கள் மற்றும் எட்டு ஊழியர்களுக்கு கொரோனாவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சீசனில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி சரியாக விளையாடவில்லை. 8 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் அட்டவணையில் ஏழாவது இடத்தில் உள்ளனர்.
மேக்ஸ்வெல்லுக்கு ஆர்டி-பிசிஆர் முடிவு வரவில்லை, ஆனால் அதற்குள் ரேபிட் ஆண்டிஜென் டெஸ்ட் எடுத்துக் கொண்டதில் கொரோனா தொற்று உறுதியானது. BBL மட்டுமின்றி, ஆஷஸ் தொடரிலும், சில வீரர்கள், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைக் கண்டு பிசிசிஐ சில உள்நாட்டு போட்டிகளை ஒத்திவைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.