#BREAKING : இலங்கையில் தமிழக மீனவர்கள் 12 பேர் விடுதலை..!

இலங்கையில் தமிழக மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
ராமநாதபுரம் மண்டபத்தில் இருந்து, தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த மாதம் 19 ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 12 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறைபிடித்து சென்றனர்.
இந்நிலையில், வவுனியா சிறையில் உள்ள 12 தமிழக மீனவர்களை விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 68 தமிழக மீனவர்களில் 12 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய இணையமைச்சர் ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025