#TNAssembly:”சிறந்த முதல்வர் ஸ்டாலின்” – ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு!

Default Image

சென்னை:தடுப்பூசி பணிகளை மக்கள் இயக்கமாக மாற்றி இரண்டாம் அலையை தடுத்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுக்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற இருந்த நிலையில்,சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில்,தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி நடைபெறு வருகிறது.தற்போது,ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அதன்படி,வணக்கம் என தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கி ஆளுநர் கூறுகையில்:

“சமீபத்தில் ஆங்கில நாளிதழ் நடத்திய ஆய்வில்,சிறந்த முதல்வராக  ஸ்டாலின் அவர்கள் தேர்வாகியுள்ளார்.ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய நாட்களிலேயே இப்பெயரை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பெற்றிருப்பது பெருமைக்குரியது.

மேலும்,தடுப்பூசி பணிகளை மக்கள் இயக்கமாக மாற்றி இரண்டாம் அலையை தடுத்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுக்கள். கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.ஒமைக்ரான் பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.ஒமைக்ரான் பரிசோதனை நடத்தும் ஆய்வகம் முதலில் அமைந்தது தமிழ்நாட்டில்தான்.

நம்மை காக்கும் 48 திட்டத்தின்கீழ் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.முல்லைப் பெரியாறு அணையில் முழு கொள்ளளவு(152 அடி உயர்த்த) நீர்தேக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்ட ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை தொடர்வதில் அரசு உறுதியுடன் உள்ளது.தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் நலனைக் காப்பதில் அரசு உறுதியாக உள்ளது.அந்த வகையில்,இலங்கை சிறையில் உள்ள 68 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரசின் இலவச பேருந்துகளில் கடந்த 4 மாதங்களில் 61% அளவிற்கு மகளிர் பயணம் செய்துள்ளனர்.

வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய மத்திய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் “,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்