அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது..!

சென்னை கலைவாணர் அரங்கில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
சென்னை கலைவாணர் அரங்கில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
2022-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், சட்டமன்றக் கூட்டத்தொடரில் என்னென்ன கருத்துக்களை முன்வைப்பது என்பது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.