#Breaking:மீண்டும் அதிர்ச்சி…50 ஆயிரத்தை தாண்டிய கொரோனா;2 ஆயிரத்தை கடந்த ஒமைக்ரான் பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 58,097 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 534 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,50,18,358 ஆக உள்ளது.மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,135 ஆக உயர்வு.
- கடந்த 24 மணி நேரத்தில் 58,097 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 19,000 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,50,18,358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 534 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,82,551 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து ஒரே நாளில் 15,389 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,43,21,803 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,71,830 ஆக இருந்த நிலையில்,தற்போது 2,14,004 ஆக அதிகரித்துள்ளது.
- நாடு முழுவதும் இதுவரை 1,47,72,08,846 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 96,43,238 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
ஒமைக்ரான் பதிப்பு:
- நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,135 ஆக உயர்ந்துள்ளது.அதில் 828 பேர் குணமடைந்துள்ளனர்.
- ஒமைக்ரான் தொற்று பாதித்த மாநிலங்களில் அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் – 653,டெல்லி – 464,கேரளாவில் – 185,தமிழகத்தில் – 121 ஆக பதிவாகியுள்ளது.
#Unite2FightCorona#LargestVaccineDrive#OmicronVariant
???????????????????? ????????????????????https://t.co/goHUQl5cOY pic.twitter.com/6G2N9Y9q2k
— Ministry of Health (@MoHFW_INDIA) January 5, 2022