கீர்த்தி சுரேஷ் – உதயநிதி – வடிவேலு – A.R.ரகுமான் – மாரி செல்வராஜ்.! உருவாகவுள்ள பிரம்மாண்ட கூட்டணி.!

மாரி செல்வராஜ் அடுத்து இயக்க உள்ள படத்தில் ஹீரோவாக உதயநிதி, ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ், முக்கிய வேடத்தில் வடிவேலு, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் என பிரமாண்ட கூட்டணி இணைய உள்ளது.
பரியேறும் பெருமாள் படம் மூலம் கவனம் ஈர்த்து, கர்ணன் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றி மூலம் திரையுலகத்தை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் கர்ணன் படத்திற்கு பிறகு துருவ் விக்ரமை வைத்து கபடி விளையாட்டை மையாக கொண்டு ஒரு படம் இயக்குவார் என கூறப்பட்டு வந்தது.
ஆனால், அந்த திரைப்படம் இப்போதைக்கு இல்லை, தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு புதிய படம் இயக்க ரெடியாக்காவிட்டார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
உதயநிதி – மாரி செல்வராஜ் கூட்டணி ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதோ இல்லையோ. ஆனால், அப்படத்தில் இணைந்த மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் பெயர் கேட்டு கண்டிப்பாக தமிழ் திரையுலகம் ஆச்சயர்யப்பட்டு தான் நிற்கும்.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க உள்ளாராம். வைகைப்புயல் வடிவேலு, காமெடியன் அல்லாத ஒரு குணச்சித்திர வேடத்தில் (கர்ணன் பட லால் போல ) நடிக்க உள்ளாராம். இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமானாம். ஒளிப்பதிவாராக கர்ணன் பட ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் பணியாற்ற உள்ளாராம்.
விரைவில் இப்படத்தினை பற்றிய அதிகாரபூர்வ பிரமாண்ட அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை PAN இந்திய திரைப்படமாக வெளியிடப்போவதாக அறிவித்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கம் – பிரதமர் மோடி கவலை.!
March 28, 2025