#Breaking:வார இறுதியில் வழிபாட்டு தலங்கள் மூடலா? – வெளியான தகவல்!

Default Image

தமிழகத்தில் வெள்ளி,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்கள் மூடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதால் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் வரும் 10-ஆம் தேதியுடன் முடியும் நிலையில் அதனை கடுமையாக்க பரிசீலனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி,இரவு நேர ஊரடங்கு,வழிபாட்டு தலங்களில் கட்டுப்பாடு, கடைநேரம் குறைப்பு உள்ளிட்டவை தொடர்பாகவும் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்ட நிலையில்,இது தொடர்பான அறிவிப்புகள் இன்று அல்லது நாளை வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,தமிழகத்தில் வெள்ளி,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்கள் மூடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி,தமிழகத்தில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய வெள்ளி,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் தடை விதிக்கப்படவுள்ளதாகவும்,இந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயில்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால்,இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

vck thirumavalavan
weather update
sunita williams
BLA
Sunita williams
Union minister Nirmala sitharaman - TVK Leader Vijay