மத்திய அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி!
மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டேவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,379 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில்,மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“கடந்த 2 நாட்களாக எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால்,எனக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது மற்றும் அதன்பின்னர் வந்தபரிசோதனை முடிவில் கொரோனா பாசிடிவ் என வந்துள்ளது.கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் உங்களை கவனித்து தேவையான பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
पिछले 2 दिनों से मैं अस्वस्थ था जिसके चलते मैंने अपनी कोरोना की जांच कराई और COVID रिपोर्ट पॉजिटिव आयी है। उन सभी से अनुरोध है जो भी लोग मेरे संपर्क में गत पिछले दिनों में आयें हैं अपना ध्यान रखें और आवश्यकता अनुसार जांच करायें।
— Dr. Mahendra Nath Pandey (@DrMNPandeyMP) January 3, 2022
அதே சமயம்,டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் உள்ளதால் அவர் வீட்டிலேயே தனிப்படுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.