சென்னையில் நேற்று ஒருநாளில் மட்டும் ரூ.2.18 லட்சம் வசூல் – சென்னை மாநகராட்சி

சென்னையில் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறிய பொதுமக்களிடம் நேற்று ஒருநாளில் மட்டும் ரூ.2.18 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறிய பொதுமக்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த 31ம் தேதி முதல் நேற்று வரை மொத்தம் 2,603 பேரிடமிடருந்து ரூ.5.45 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நேற்று ஒருநாளில் மட்டும் ரூ.2.18 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.