2 வயது குழந்தையை கடித்து குதறிய நாய்..! நேரில் சென்று குழந்தையை பார்த்து ஆறுதல் கூறிய அமைச்சர் ..!

Default Image

நெய்வேலியில் 2 வயது குழந்தையை நாய் கடித்ததில் கடுமையாக காயமடைந்த நிலையில், குழந்தையை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறிய அமைச்சர் சி.வி.சண்முகம். 

கடலூர் மாவட்டம், நெய்வேலி பகுதியை சேர்ந்தவர்கள் சபரிநாத்- தமிழரசி தம்பதியினர். இவர்களுக்கு 2 வயது ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, நெய்வேலி மெயின் பஜாரில் உள்ள கோல்டன் ஜூப்ளி பார்க்கிற்கு, தாத்தாவுடன் உடன் சென்றுள்ளார்.

பூங்காவில் குழந்தை விளையாடிக் கொண்டிருநதுள்ளார். தாத்தா தண்ணீர் பிடிப்பதற்காக சென்ற பொழுது, பூங்காவில் தனியாக இருந்த குழந்தையை திடீரென்று வந்த நான்கு தெரு நாய்கள் கடித்தது. இதனால், குழந்தை பலத்த காயத்திற்கு ஆளானது.

இதனை எடுத்து, அக்குழந்தை புதுச்சேரியில் பிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், குழந்தையின் நிலை குறித்தும், மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், அரசாங்கம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழந்தையின் தாய் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில், தமிழக முதல்வர் உத்தரவுபடி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் நள்ளிரவில் ஓசூரில் உள்ள அவர்களது வீட்டிற்க்கு சென்று ஆறுதல் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்