#Breaking: 2 மேலடுக்கு சுழற்சி…4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்!

Default Image

சென்னை:தமிழகத்தில் தேனி,ராமநாதபுரம்,தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழக கடற்கையை ஒட்டி ஒரு மேலடுக்கு சுழற்சி மற்றும் மன்னார் வளைகுடா,தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டி ஒரு மேலடுக்கு சுழற்சி என 2 மேலடுக்கு சுழற்சி காரணமாக,தமிழகத்தில் தேனி,ராமநாதபுரம்,தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,தென் மாவட்டங்களில் மிதமான மழையும்,வட மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை:வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், எனினும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,ஜனவரி 5 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மழை படிப்படியாக குறைந்து வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

02.01.2022 முதல் 03.01.2022 வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரி பகுதியில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால்,மேலே குறிப்பிட்ட காலத்திற்கு கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்