தமிழகத்தில் 50,000 இடங்களில் 17-வது மெகா தடுப்பூசி முகாம்..!

தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் இன்று 17வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது வரை 16 மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்துள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் 17-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இந்த தடுப்பூசி முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு.!
April 28, 2025