#Breaking:15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு தடுப்பூசி – தமிழக அரசு செய்த ஏற்பாடு!

Default Image

15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு பள்ளிகளிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து 15 – 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி முன்னதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து,15- 18 வயதான சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட https://www.cowin.gov.in/  COWIN செயலியில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என கோவின் தலைவர் ஷர்மா தெரிவித்த நிலையில்,இதற்கான முன்பதிவு கோவின் இணையதளத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன்படி,ஆதார் இல்லாதோர் பத்தாம் வகுப்பு ஐடி கார்டு மூலம் தடுப்பூசி போட முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு பள்ளிகளிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.ஜனவரி 3 ஆம் தேதி போரூர் பள்ளியில் சிறார் தடுப்பூசி திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார்.

மேலும்,15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதன்படி,

  • கொரோனா தடுப்பூசி செலுத்த விரும்பும் மாணவர்களுக்கு சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும்,இதற்காக ஒரு ஆசிரியரை சிறப்பு அதிகாரியாக தலைமை ஆசிரியர் பணியமர்த்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2007 மற்றும் அதற்கு முன் பிறந்த பள்ளி மாணவர்களின் விவரங்களை அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்