Faradion நிறுவனத்தின் 100% பங்குகளை 100 மில்லியன் பவுண்டுக்கு வாங்கிய ரிலையன்ஸ்..!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட் ஃபராடியன்( Faradion) நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்துள்ளது.
பிரிட்டனை தலைமையாகக் கொண்டு இயங்கும் ஃபராடியன் ( Faradion) நிறுவனம் உலகிலேயே முன்னணி பேட்டரி தொழில்நுட்ப நிறுவனமாக விளங்குகிறது. குறிப்பாகச் சோடியம் ஐயன் பேட்டரி தயாரிப்புக்குகான தொழில்நுட்பத்தில் முன்னோடியாக உள்ளது.
இந்நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட் ஃபராடியன்( Faradion) நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார், பிரிட்டிஷ் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை 100 மில்லியன் பவுண்டுகளுக்கு வாங்கும். இதன் மூலம் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலைக்கான தொழில்நுட்பத்தை ரிலையன்ஸ் இலவசமாகப் பெற முடியும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குஜராத் ஜாம்நகரில் அமைக்கப்பட உள்ள திருபாய் அம்பானி கிரீன் எனர்ஜி ஜிகா காம்பிளெக்ஸ் திட்டத்தில் மிகப்பெரிய எனர்ஜி ஸ்டோரேஜ் ஜிகா பேக்டரி அமைக்க உள்ளது. இந்தத் தொழிற்சாலைக்கு Faradion நிறுவனத்தின் சிறப்பான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் எரிசக்தி சேமிப்பு திறன் மேலும் வலுப்பெறும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தால் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு என்ன லாபம்?
பிரிட்டிஷ் நிறுவனமான Faradion சோடியம் அயன் பேட்டரி தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையைப் பெற்றுள்ளது மற்றும் பேட்டரி தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். ஃபேரேடியனின் சோடியம்-அயன் தொழில்நுட்பம் மற்ற பேட்டரி தொழில்நுட்பத்தை விட உயர்ந்தது.
குறிப்பாக லித்தியம்-அயன் மற்றும் லெட்-அமில தொழில்நுட்பத்துடன் ஒப்பிடும்போது. இந்த தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இது கோபால்ட், லித்தியம், தாமிரம் மற்றும் கிராஃபைட் ஆகியவற்றை சார்ந்து இருக்க வேண்டியதில்லை. இதில் பயன்படுத்தப்படும் சோடியம் பூமியில் இருக்கும் கனிமங்களில் ஆறாவது மிகக் கிடைக்கும் தனிமமாகும்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் போக்கு வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் மொபைலுக்கும் இங்கு பெரிய சந்தை உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ரிலையன்ஸ் இந்த சந்தையில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்க முடியும்.