இன்று முதல் 5% ஜிஎஸ்டி வரி – வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமா?..!
இன்று முதல் ஸ்விக்கி,சோமேட்டோ(Swiggy மற்றும் Zomato ) ஆன்லைன் உணவு விநியோக சேவை தளங்கள் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) ஐந்து சதவீதத்தை மத்திய அரசுக்கு செலுத்தும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால்,வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம்,லக்னோவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த செப்டம்பர் 17, 2021 நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ஸ்விக்கி மற்றும் சோமாடோ போன்ற உணவு விநியோக தளங்களுக்கு வரி விதிக்க கவுன்சில் முடிவு செய்தது.அதன்படி,ஸ்விக்கி மற்றும் சோமாடோ நிறுவனங்கள் மேற்கொள்ளும் உணவு டெலிவரிக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்றும்,இந்த நடைமுறை ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்திருந்தது.
அந்த வகையில்,இன்று முதல் ஸ்விக்கி,சோமேட்டோ(Swiggy மற்றும் Zomato ) ஆன்லைன் உணவு விநியோக சேவை தளங்கள் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) ஐந்து சதவீதத்தை மத்திய அரசுக்கு செலுத்தும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளன.இதனால்,Swiggy மற்றும் Zomato போன்ற பிரபலமான ஆன்லைன் உணவு விநியோக சேவை நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தைக் குறைக்க எந்த நேரத்திலும் ஒவ்வொரு ஆர்டருக்கும் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும்,வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமா? என்பது இன்னும் சரியாக தெளிவாகவில்லை.இந்த சேவைகள்,தற்போது Swiggy மற்றும் Zomato உள்ளிட்ட ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்கள் மேற்கொள்ளும் அனைத்து ஆர்டர்களிலும் ஐந்து சதவீதம் கூடுதல் ஜிஎஸ்டியை வசூலிப்பதற்கும் செலுத்துவதற்கும் மட்டுமே பொறுப்பாகும்.ஆனால்,அடுத்த மாதம் முதல்,Swiggy மற்றும் Zomato சார்பில் வாடிக்கையாளர்களிடம் இருந்து வரி வசூலித்து,மத்திய அரசிடம் டெபாசிட் செய்யவுள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த கட்டணம் Swiggy மற்றும் Zomato விதிக்கும் வழக்கமான 18 சதவீத ஜிஎஸ்டியுடன் கூடுதலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அதன்படி,இந்த நிறுவனங்கள் வரி விதிப்பு மாற்றத்தின் காரணமாக இழப்புகளைக் குறைக்கவும்,கூடுதல் இணக்கச் சுமையைப் பெறவும் விலைகளை அதிகரிக்கலாம்.
எனினும்,இந்த வரி விதிப்பு சிறிய உணவு உணவகங்கள் மற்றும் கடைகளையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.ஏனெனில் இந்த பிரபலமான ஆன்லைன் உணவு விநியோக சேவைகளின் உதவியுடன் அவர்கள் பெறும் ஒவ்வொரு ஆர்டருக்கும் ஐந்து சதவீத ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
ஏன் இந்த வரி விதிப்பு?
வரி செலுத்துவதைத் தவிர்க்கும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஜிஎஸ்டி கவுன்சில் இந்தப் புதிய வரி விதிப்பை அமல்படுத்துகிறது என்றும்,இது நிர்வாகத்தை எளிதாக்க உதவும் என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.