நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் ரிலீஸ் எப்போது..? அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..!
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் 2022-ஆம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் தற்போது படு வேகமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். டார்க் காமெடி, ஆக்சன் கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறது.
பூஜா ஹெக்டே ஹீரோயினாகவும், செல்வராகவன் வில்லனாகவும் நடித்து வருகின்றார். மேலும் பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படம், 2022-ஆம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Happy New Year Nanba ❤ ⁰From team #Beast @actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @manojdft @Nirmalcuts @anbariv #BeastFromApril pic.twitter.com/xNYz8kGYwP
— Sun Pictures (@sunpictures) December 31, 2021