#BREAKING : நகைக்கடன் தள்ளுபடிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு -அமைச்சர் அறிவிப்பு..!

Default Image

கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வைத்தவர்களில் 10,18,066 பேருக்கு கடன் தள்ளுபடிக்கு தகுதியானவை

48 லட்சம் கடன்களில் 35 லட்சம் கடன் தள்ளுபடி இல்லை என நேற்று தகவல் வெளியானது. இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வைத்தவர்களில் 10,18,066 பேருக்கு கடன் தள்ளுபடிக்கு தகுதியானவை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார். குடும்ப அட்டை, ஆதார் விவரங்களை சரியாக அளிக்க இயலாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும். பின்னர் அவை சரிபார்த்து ஆய்வின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படும்.

குடும்ப அட்டை, ஆதார் விவரங்கள் சரியாக இல்லையென தெரிவித்து நிராகரிக்கப்பட்ட நபர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார். 40 கிராமுக்கு உட்பட்டு நகைக்கடன் வைத்தவர்களின் எண்ணிக்கை 22,52,226  ஆகும். 22,52,226 கடன்தாரர்களில் தள்ளுபடி தகுதியான நபர்களாக  10,18,066 பேர் என கணக்கெடுக்கப்பட்டுள்ளன.

நகைக்கடன் தள்ளுபடியில், உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம். 35 லட்சம் பேருக்கு கடன் தள்ளுபடி இல்லை என தகவல் வெளியான நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்