அதிர்ச்சி : 14 வயது சிறுமியை தவறுதலாக சுட்டுக் கொன்ற போலீசார்…!

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள துணிக்கடையில், 14 வயது சிறுமியை தவறுதலாக சுட்டுக் கொன்ற போலீசார்.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள துணிக்கடை ஒன்றில் மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் நுழைந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், மர்ம நபரால் பெண் ஊழியர்கள் தாக்கப்பட்டு, கீழே ரத்த காயங்களுடன் கிடந்துள்ளனர்.
இதைக்கண்ட போலீசார் குற்றவாளியை பிடிக்க துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அப்போது சுவரை துளைத்து கொண்டு சென்ற குண்டு, உடைமாற்றும் அறையில் இருந்த 14 வயது சிறுமி மீது பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் அந்த சிறுமி தனது தாயின் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தனது 15-வது பிறந்த நாளுக்காக புத்தாடை வாங்குவதற்காக கடைக்கு சென்ற சிறுமிக்கு இந்த நிலைமை நேர்ந்துள்ளது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்த சீசன் 6 தோல்வி…மன வேதனையில் குமுறிய பாட் கம்மின்ஸ்!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025