ரூ.10 கோடி மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயலிகளுடன் கூடிய திறன்பேசி – அரசாணை வெளியீடு!
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் செவித்திறன் பாதிப்படைந்த மாற்று திறனாளிகளுக்கு செயலிகளுடன் திறன்பேசிகள் வழங்குவது தொடர்பான அரசாணை வெளியீடு
இதுகுறித்து வெளியான அறிக்கையில், மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரின் கடிதத்தில் 2021-22 ம் நிதியாண்டில் வரவு செலவு திட்டத்தில் இத்திட்டத்திற்கு 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் 2021 -2022 நிதி ஆண்டிலும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு திறன்பேசிகள் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திட ரூ.10 கோடிக்கும் கொள்முதல் செய்வதற்கு நிர்வாகம் மற்றும் நிதி ஒப்பளிப்பு அனுமதி வழங்குமாறு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் வேண்டுகோள் விடுத்தார்.
இதைத்தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரின் கருத்துருவினை பரிசீலினை செய்த அரசு அதனை ஏற்று, 2021-2022 ஆம் நிதியாண்டில் சுமார் 5000 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் 5,000 செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய திறன் பேசி வழங்கும் திட்டத்தினை தொடர்ந்திட நிர்வாக அனுமதியும் மற்றும் இத்திட்டத்தினை செயல்படுத்திட ஏதுவாக கீழ்க்காணும் நிபந்தனையின் அடிப்படையில் ரூ.10.00 கோடியினை (ரூபாய் பத்து கோடி மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்தும் ஆணையிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.