விமானத்தில் மாஸ்க் அணியாமல் சாப்பிட்ட முதியவரை தாக்கிய பெண்..! வீடியோ உள்ளே..!

விமானத்தில் மாஸ்க் அணியாமல் சாப்பிட்ட முதியவரை தாக்கிய பெண்.
கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், மக்கள் அனைவரும் வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ஒரு பெண் தனது பக்கத்தில் அமர்ந்திருந்த முதியவர் மாஸ்க் அணியாமல் இருந்ததால் அவரை தாக்கியுள்ளார். அந்த முதியவர் பயணத்தின் போது மாஸ்க் அணிந்து இருந்த நிலையில், சாப்பிடுவதற்காக கழட்டியுள்ளார். அப்போதுதான் அப்பெண் அவரை தாக்கியுள்ளார்.
இதனை அந்த விமானத்தில் பயணித்த சக பயணிகள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த பெண்ணின் தாக்குதலையடுத்து விமானம் தரையிறங்கியதும் அப்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025