#Breaking:உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணை எப்போது? – நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு!
சென்னை:உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் ஜனவரி 3 முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அனைத்து வழக்குகளும் நேரடியாக மட்டுமே விசாரிக்கப்படும் என்று நீதிமன்ற பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் காணொலி காட்சி மூலமாக விசாரிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில்,ஜனவரி 3 ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் காணொலி காட்சி மூலமான வழக்குகள் விசாரணை நிறுத்தப்படுவதாக நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது.
மேலும்,திங்கட்கிழமை (ஜனவரி 3) முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அனைத்து வழக்குகளும் நேரடியாக மட்டுமே விசாரிக்கப்படும் என்று நீதிமன்ற பதிவாளர் தனபால் தெரிவித்துள்ளார்.
21 மாதங்களுக்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் நேரடி விசாரணை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.