தெலுங்கானா-சத்தீஸ்கர் எல்லையில் 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்..!
தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கரின் எல்லைப் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் நான்கு பெண்கள் உட்பட 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கரின் எல்லைப் பகுதியில் உள்ள கிஸ்டாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனப் பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் நான்கு பெண்கள் உட்பட 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
இது தெலங்கானா காவல்துறை, சத்தீஸ்கர் காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கை என்று தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்ட எஸ்பி சுனில் தத் தெரிவித்தார்.