இரவு நேர ஊரடங்கு – வரும் 31ம் தேதி முதலமைச்சர் ஆலோசனை!
ஊரடங்கு நீட்டிப்பது குறித்து வரும் 31ம் தேதி முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஒமைக்ரான் வேகமாக அதிகரித்து வருகிறது. இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 578 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
அதிகபட்சமாக டெல்லியில் 142, மகாராஷ்டிராவில் 141, கேரளாவில் 57 மற்றும் தமிழகத்தில் 34 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, ஓமைக்ரான் பரவல் வேகமாக பரவி வருவதால், இரவுநேர ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாடுகள் என தடுப்பு நடவடிக்கைகளை தேவைப்பட்டால் மாநில அரசுகள் அமல்படுத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
அதன்படி, டெல்லி , கர்நாடகா, அசாம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை ஓமைக்ரான் வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்த நிலையில், டிசம்பர் 31ம் தேதி மீண்டும் ஊரடங்கு தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளோம் என்றும் அதன் பிறகு இரவு நேர ஊரடங்கு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.