பீகாரில் பாய்லர் வெடித்து 6 பேர் உயிரிழப்பு!
பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.
பீகார் மாநிலம் முஸாபர்பூரில் நூடுல்ஸ் தயாரிப்பு ஆலையில் கொதிகலன் (பாய்லர்) வெடித்து 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும், காயம் அடைந்த மேலும் 6 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளதாகவும் அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. நூடுல்ஸ் தொழிற்சாலையில் இன்று காலை 10 மணியளவில் விபத்து ஏற்பட்டதாக மாவட்ட ஆட்சியர் பிரவன் குமார் தெரிவித்தார்.