விஜய் – யுவன் ஷங்கர் ராஜா சந்திப்பின் பின்னணி இதுதானா.?! வெளியான ‘நச்’ தகவல் இதோ..

Default Image

தளபதி விஜய் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா சந்திப்பின் போது திரைப்படங்களை பற்றி எதுவும் பேசவில்லையாம். மரியாதை நிமித்தமான சந்திப்பாக மட்டுமே இது அமைந்தது என தகவல் வெளியாகியுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் தளபதி விஐய் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா சந்தித்து கொண்ட போட்டோவை யுவன் ஷங்கர் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அது இணையத்தில் தீயாய் பரவியது. டிவிட்டர் பக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா பதிவிட்ட போட்டோ அதிக லைக்குகள் வாங்கிய பதிவு தளபதி உடன் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தான் எனும் அளவிற்கு ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

இதற்கு காரணமும் உண்டு. புதிய கீதை படத்திற்கு பிறகு தளபதி விஜய் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்ததே இல்லை. அப்படி இருக்கையில் இந்த திடீர் சந்திப்பு பலவித யூகங்கள் இணையத்தில் உலா வர வழிவகுத்தது.

உண்மையில் நடந்தது என்ன, அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தை ஏதும் நடைபெற்றதா என ரசிகர்கள் குழம்பி போய் இருக்க, தற்போது தான் அந்த தகவல் வெளியாகியுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா தான் தளபதி விஜய்யை சந்திக்க விஜய் தரப்பிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். பீஸ்ட் ஷூட்டிங்கில் பிசியாக இருந்ததால், அதற்கு நேரம் இல்லாமல் இருந்ததாம். பீஸ்ட் டப்பிங் பணிகள் எல்லாம் முடிந்த பிறகு, டிசம்பர் 22ஆம் தேதி தளபதி விஜய் – யுவன் சந்திப்பு நிகழ்ந்ததாம்.

ஆனால், அவர்கள் இருவரும் திரைப்படங்களை பற்றி எதுவும் பேசவில்லையாம். இருவரும் தங்களுக்குள் நலம் விசாரித்துக்கொண்டு, வெகு நேரம் பேசிவிட்டு பிறகு சென்றுள்ளனர். படங்கள், பற்றியோ, பாடல்கள் பற்றியோ எந்த கருத்தும் பகிர்ந்துகொள்ளபடவில்லையாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்