3 வரி.! 2 ஹைகூ.! 1 லட்சம் பரிசுத்தொகை.! இயக்குனர் லிங்குசாமி சூப்பர் அறிவிப்பு.!
மறைந்த கவிஞர் அப்துல் ரகுமான் நினைவாக ஹைக்கூ கவிதை போட்டியை நடத்துகிறார் இயக்குனர் லிங்குசாமி. இந்த போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு 1 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.
தமிழ் கவிதை உலகில் முக்கிய அங்கமாக திகழ்ந்தவர்களில் சமகால கவிஞர் கவிகோ அப்துல் ரகுமான். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு இம்மண்ணுலகை விட்டு பிரிந்தார். இவரது நினைவாக இயக்குனர் லிங்குசாமி ஒரு கவிதை போட்டி ஒன்றை அறிவித்துள்ளார்.
சிவகுமார் என்பவருடன் இணைந்து இந்த போட்டியை நடத்துகிறார் இயக்குனர் லிங்குசாமி. கவிகோ அப்துல் ரகுமான் மீது அதீத அன்பு கொண்ட லிங்குசாமி இந்த போட்டியை நடத்துவதாக அறிவித்துள்ளார்.
இந்த போட்டியில் கலந்துகொள்ள வயது வித்தியாசம் கிடையது. யார்வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். 3 வரிகள் மட்டுமே கொண்ட ஹைக்கூ வகை கவிதைகள் மட்டும் அனுப்ப வேண்டும். ஒரு நபர் 2 கவிதைகள் வரை அனுப்பலாம். [email protected] என்கிற இணையதள முகவரிக்கு போட்டியாளர்கள் தங்கள் ஹைக்கூ கவிதைகளை அனுப்பவேண்டும்.
நடுவர்கள் இறுதி முடிவு செய்து மார்ச் மாதம் அதன் முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற போட்டியாளருக்கு 1 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட உள்ளதாம்.