இன்றைய (26.12.2021) நாளின் ராசி பலன்கள்..!
மேஷம் : இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் சில போராட்டங்களை சந்திக்க நேரிடும். உங்கள் மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று பண வரவு ஏற்ற குறைவாக இருக்கும். இன்று சோர்வாக இருப்பீர்கள்.
ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு பெரிய மாற்றங்கள் அமையும். உத்தியோக வேலையில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டாது. மனைவியிடம் மோதல் ஏற்படும். இன்று செலவுகள் அதிகமாக இருக்கும். தோள் வலி ஏற்படும்.
மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உங்கள் இலக்குகளை எளிதாக அடைவீர்கள். உத்தியோகத்தில் எளிமையாக பணிகளை செய்வீர்கள். துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு குடும்ப பொறுப்புகள் அதிகமாக அமையும். இன்று உத்தியோக இடத்தில் பணிகள் அதிகரித்து காணப்படும். துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக காணப்படும். கால் வலி ஏற்படலாம்.
சிம்மம் : இன்று உங்களுக்கு கூடுதல் பொறுப்பு காரணமாக பதட்டம் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் அமைதியான அணுகுமுறை வேண்டும். உங்கள் மனைவிடத்தில் உணர்ச்சிவசமாக நடந்து கொள்வீர்கள். பணவரவு குறைவாக இருக்கும். சளி தொல்லை மற்றும் இருமல் பாதிப்பு ஏற்படலாம்.
கன்னி : இன்றைய நாள் நீங்கள் நேர்மறையான மனநிலையில் இருப்பீர்கள். உத்தியோக வேலையில் திட்டமிட்டு செயல்படுங்கள். உங்கள் மனைவியிடத்தில் உணர்ச்சிவசமாக நடந்து கொள்வீர்கள். இன்றைய நாளில் வரவும் செலவும் அதிகமாக காணப்படும். ஆரோக்கியமான உணவு சாப்பிடுங்கள்.
துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு முன்னேற்றமான நாள். உத்தியோக இடத்தில் வெற்றி கிட்டும். உங்கள் மனைவியிடத்தில் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.
விருச்சிகம் : இன்றைய நாள் உறுதி மற்றும் தைரியம் உடைய மகிழ்ச்சியான நாளாக அமையும். உத்தியோகத்தில் பாராட்டை பெறுவீர்கள். காதலுக்கு உகந்த நாள். பணவரவு அதிகமானதாக இருக்கும். இன்று உடல் ஆரோக்கியமாக இருக்கும். இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
தனுசு : இன்று நீங்கள் வெற்றி பெறுவதற்கு அமைதியாக இருக்க வேண்டும். உத்தியோக வேலையில் திட்டமிட்டு செயல்படுங்கள். இன்று உங்கள் துணையிடம் அனுசரித்து நடக்கவும். இன்றைய நாளில் பணவரவு குறைவாக இருக்கும். தோள் வலி ஏற்படும்.
மகரம் : இன்று சில தடைகள் வந்தாலும் திட்டமிட்டு செயல்படுங்கள். உத்தியோக வேலையில் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் துணையிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். பணவரவு குறைவாக இருக்கும். செரிமான கோளாறு ஏற்படும்.
கும்பம் : இன்று சிறப்பான நாளாக அமையும் என்பதால் உங்களது சுய வளர்ச்சிகளை துவங்கலாம். உத்தியோக வேலையில் வளர்ச்சி கிட்டும். காதலுக்கு உகந்த நாள். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
மீனம் : இன்றைய நாளில் உங்களது முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். உத்தியோக வேலையில் சுமுமாக வெற்றி காண்பீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக பேசுவீர்கள். இன்று பண வரவு அளவுக்கு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.