மதங்களை படைத்தது மனிதன்தான்.! விஜய் ஆண்டனியின் வித்தியாசமான கிறிஸ்துமஸ் வாழ்த்து.!

கடவுள் மனிதனை மட்டுமே படைத்தான், மனிதன்தான் மதங்களை படைத்தான். – தனது டிவிட்டர் பக்கத்தில் விஜய் ஆண்டனி கிறிஸ்துமஸ் வாழ்த்தை பதிவிட்டுள்ளார்.
உலகம் முழுக்க இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சாதி மத வேறுபாடுகளை கடந்து இந்திய மக்கள் அனைவரும் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு தங்கள் மனமார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பலரும் கிறிஸ்துமஸை கொண்டாடி வருகின்றனர். திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை நாட்டு மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தனது கிறிஸ்துமஸ் வாழ்த்தை டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், ‘ உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்துக்கள். கடவுள் மனிதனை மட்டுமே படைத்தான். மனிதன்தான் மதங்களை படைத்தான். அன்பே சிவம்.‘ என பதிவிட்டுள்ளார்.
கடவுள் நம்மை படைத்தார். நாம் தான் மதங்களை கொண்டு பிரிந்து வாழ்கிறோம். என தனது நல்ல கருத்தை பதிவிட்டுள்ளார்.
உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்துக்கள்????????
கடவுள் மனிதனை மட்டுமே படைத்தான்,
மனிதன்தான் மதங்களை படைத்தான்.
அன்பே சிவம்❤️— vijayantony (@vijayantony) December 25, 2021