பெண்களின் பாதுகாப்பு – புதிய திட்டம் தீட்டும் தமிழக அரசு!
பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் வரைவு திருத்தங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டம்.
பேருந்தில் பெண் பயணிகளிடம் தவறாக நடந்து கொள்பவர்களை நடத்துநரே கீழே இறக்கிவிடலாம் அல்லது காவல்துறையில் ஒப்படைக்கலாம் என மோட்டார் வாகன விதிகளில் வரைவு திருத்தும் மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேருந்துகளில் பெண் பயணிகளிடம் ஆபாச செயலை செய்தாலோ, விசில் அடிப்பது, கண் சிமிட்டுவது உள்ளிட்ட தவறான செய்கைகளை குற்றமாக கருதப்படும் என்று கூறப்படுகிறது.
பெண்களிடம் தவறாக நடந்துகொள்பவர்கள் எச்சரிக்கை பின்னரும் அந்த செயலை செய்தால் நடத்துனரே பேருந்துகளில் இருந்து இறக்கி விடலாம் அல்லது காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என அந்த வரைவு திருத்த சட்டத்தில் உள்ளதாகவும், ஒரு பெண் பயணி அல்லது சிறுமியின் பயணத்தின் நோக்கம் குறித்து தேவையற்ற கேள்விகள் எதையும் கேட்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.