நடிகர் பார்த்திபனுக்கு கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்! இவர்தான் முதல் தமிழ் நடிகராம்!

Default Image

இந்த கெளரவத்தை பெறும் முதல் தமிழ் நடிகர் என்று ஐக்கிய அரபு அமீரகத்தில் கோல்டன் விசா பெற்ற நடிகர் பார்த்திபன் ட்வீட்.

ஐக்கிய அரபு அமீரகம் கடந்த 2019ம் ஆண்டில் கோல்டன் விசாவை அமல்படுத்தியது. இந்த கோல்டன் விசா இருக்கும் வெளிநாட்டவர்கள், ஒரு தேசிய ஆதரவாளரின் தேவையின்றி, அங்கு தங்கலாம், படிக்கலாம், பணிபுரியலாம் என்பதாகும். ஐக்கிய அரபு அமீரகத்தில் கோல்டன் விசா 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். இந்த விசாவை வைத்திருப்பவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் குடிமகன் போலவே கௌரவிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த விசாக்கள் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் மற்றும் தானாகவே புதுப்பிக்கப்படும் என்பது குறிப்பிடப்படுகிறது. அங்குள்ள அரசாங்கம், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிக ஆர்வம் மற்றும் திறன் கொண்ட பிரகாசமான மாணவர்கள் மற்றும் அறிவியல் மற்றும் அறிவியலின் பல்வேறு துறைகளில் தனிப்பட்ட மற்றும் சிறப்பான திறன் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு கோல்டன் விசாக்கள் வழங்கப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகம் கடந்த சில மாதங்களாக இந்திய திரையுலக நட்சத்திரங்கள் சிலருக்கு கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. இந்த நிலையில் முதல் முறையாக தமிழ் நடிகர் பார்த்திபனுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது. இதுகுறித்து நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், Golden visa துபாயில் எனக்கு வழங்கப்பட்டது. இந்த கௌரவத்தை பெறும் முதல் தமிழ் நடிகர் நான் என்பதாக அதை பெற்றுத் தர முயற்சி எடுத்த JUMA ALMHEIRI GROUP OF COMPANY-MOHAMMED SHANID (CEO) & இதர நண்பர்கள் சொன்னார்கள். விசாரித்து பார்த்ததில் உண்மைப் போலவே தோன்றியது என தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை திரிஷாவுக்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கௌரவித்திருந்தது. இதன் மூலம் கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை பெற்றிருந்தார். அந்த வரிசையில் கோல்டன் விசா பெட்ரா முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை பார்த்திபன் பெற்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்