மேம்பாலத்தில் விரிசல்;இன்று 23 ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
சென்னை:காட்பாடி அருகே ரயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக இன்று 23 ரயில்கள் ரத்து செய்யப்பதுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே திருவலத்தில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக,இன்று 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி,ஜோலார்பேட்டை,சென்னை,வேலூர்,பெங்களூரு,மைசூரு,மங்களூரு,கோவை,ரேணிகுண்டா,அரக்கோணம் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியூர்களுக்கு செல்ல இருந்த பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.எனினும்,ஏற்கனவே புறப்பட்டு சென்ற ரயில்கள் மற்றொரு வழித்தடத்தில் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும்,பொன்னையாற்றில் ஆங்கிலேயர்கால ரயில்வே மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மங்களூரு-சென்னை, ஆலப்புழா-சென்னை,ரேணிகுண்டா-மைசூரு உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Due to the suspension of traffic on Bridge no.299 in the Arakkonam-Katpadi section on account of structural damage to the bridge, the following are more changes in the pattern of train services due to cancellations and diversions of trains. Please plan your travel accordingly. pic.twitter.com/y9RhiCi10Y
— DRM Chennai (@DrmChennai) December 23, 2021