உலகம் முழுவதும் கொரோனாவால் 27.84 கோடி பேர் பாதிப்பு!
உலகம் முழுவதும் கொரோனாவால் 27.84 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 54 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 27.84 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவில் இருந்து 24.91 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 54 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 9.47 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு -ஏற்பட்டுள்ள நிலையில், 6,429 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் புதிதாக 2,55,011 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 1,105 பேர் தொற்றால் பலியாகியுள்ளனர். இதுவரை அமெரிக்காவில் மொத்தம் 5.27 கோடி பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், 8,34,411 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுபோன்று பிரேசிலில் ஒரே நாளில் 3,645 பேர் கொரோனாவால் உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 100 பேர் இறந்தனர். அந்நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 2.22 கோடியாகும், உயிரிழப்பு எண்ணிக்கை 6,18,228 ஆக உள்ளது.
மேலும், பிரிட்டனில் ஒரே நாளில் 1,19,789 பேருக்கு நோய்த்தொற்று உறுதியான நிலையில், மொத்தம் பாதிப்பு 1.17 கோடியாக அதிகரித்துள்ளது. இங்கு ஒரே நாளில் கொரோனாவுக்கு 147 பேர் உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 1,47,720 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.