எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த டிடிவி தினகரனுக்கு வழங்கிய அனுமதி ரத்து..!
அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த காவல்துறையினர் வழங்கிய அனுமதி ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினத்தையொட்டி நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் அஞ்சலி செலுத்துவதற்கு வழங்கியிருந்த அனுமதியை, சென்னையில் கொரோனா பெருந்தொற்று மீண்டும் அதிகரிப்பதால் காவல்துறையினர் தற்போது ரத்து செய்திருக்கிறார்கள்.
எனவே, சமூக பொறுப்புமிக்க அரசியல் இயக்கமாக பொதுமக்களுக்கிடையே நோய்ப் பரவல் ஏற்படக் காரணமாகிவிடக்கூடாது என்கிற அக்கறையோடு சென்னை இராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் உரிய கொரோனா நெறிகாட்டு வழிமுறைகளின் படி புரட்சித்தலைவருக்கு நினைவஞ்சலி செலுத்தப்படவிருக்கிறது.
நாளைய நினைவஞ்சலி நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து புறப்படவிருந்த நிர்வாகிகளும் உடன்பிறப்புகளும் சென்னைக்கு வராமல் அவரவர் ஊர்களில் புரட்சித்தலைவரின் திருவுருவப்படத்தினை வைத்து இதய அஞ்சலியைச் செலுத்துடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அத்தகைய நிகழ்வுகளில் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை சரியாகக் கடைபிடிக்க வேண்டுமென்றும் அன்போடு அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரட்சித்தலைவர் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு கொரோனா தொற்று அதிகரிப்பதால் காவல்துறையினரின் அனுமதி ரத்து ! கழக உடன்பிறப்புகள் அவரவர் ஊர்களில் நினைவு அஞ்சலி செலுத்திட வேண்டுகோள்! pic.twitter.com/B9Z6ouITbR
— AMMA MAKKAL MUNNETTRA KAZAGAM (@ammkofficial) December 23, 2021