அமெரிக்காவில் காணாமல் போன 19 வயது மாணவி நிர்வாணமாக மீட்பு..!

Default Image

கடந்த 13 -ஆம் தேதி மேடலின் ஆலன்(19) என்ற மாணவி சனிக்கிழமை நிர்வாணமாக நிலக்கரியில் மூடப்பட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்டார்.

அமெரிக்காவில் கடந்த 13 -ஆம் தேதி மேடலின் ஆலன்(19) என்ற மாணவி கல்லூரியில் இரவு 9:22 மணியளவில் தனது விடுதியில் இருந்து வெளியேறியுள்ளார் அவர் தங்கி இருந்த விடுதியில் இருந்து  வெளியேறும்போது வெள்ளை நிற ஜாக்கெட் அணிந்திருப்பதைக் சிசிடிவி காட்சிகள் காட்டியது.

இந்த மாணவி காணாமல் போன ஐந்து நாட்கள் பிறகு 39 வயது ஆணின் வீட்டின் அடித்தளத்தில் நிர்வாணமாக நிலக்கரியில் மூடப்பட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஐந்து நாட்களுக்குப் பிறகு சனிக்கிழமை (அதாவது 18-ஆம் தேதி) இரவு வெய்ன் கவுண்டியில் உள்ள பிரவுனின் வீட்டில் ஆலனை போலீசார் கண்டுபிடித்தனர்.

பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதைத்தொடர்ந்து, பிரென்ட் பிரவுன்(39) என்பவர் மீது கடத்தல், பலாத்காரம் ஆகிய குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்