‘மீண்டும் மஞ்சப்பை’ – இந்த உலகத்திலேயே மக்காதது இரண்டு தான்..! குறும்படத்தில் விஜய்சேதுபதி..!

Default Image

நம்ம பயன்படுத்தி நம்ம உசுரோட இருக்கும் வரை மக்காம இருக்கிறது ரெண்டே ரெண்டுதான்.

சுற்றுச்சூழல்,காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள,தமிழ்நாடு அரசின் “மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு இயக்கத்தை,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,சென்னை கலைவாணர் அரங்கத்தில் தற்போது தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள குறும்படத்தையும் முதல் வெளியிட்டுள்ளார். அதில் விஜய் சேதுபதி அவர்கள்,  ‘இந்த உலகத்துல நம்ம எல்லாருக்கும் பிரச்சனை இருக்கு. ஆனா இப்ப இந்த உலகத்துக்கு ஒரு பிரச்சனை இருக்கு. அதை யாராவது என்னைக்காவது கேட்டிருப்போமா? இனிமேலாவது கேட்போம்.

இந்த உலகத்தில் வாழ்வதற்கு ஆசையும், கனவும், உயிரும் எவ்வளவு முக்கியமோ அதே போல இந்த உலகமும் மிகவும் முக்கியம், சாப்பாட்டில் உப்பு, மசாலா போட்டு சாப்பிடுவோம், ஆனால் பிளாஸ்டிக் போட்டு சாப்பிடுவோமா? ஆனால் நாம் சாப்பிடும் உணவில் பிளாஸ்டிக் காலந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.

நாம் பயன்படுத்துகிற இந்த பிளாஸ்டிக், மண், தண்ணீர் ஆகியவற்றைக் கலந்து விலங்குகள், பறவைகள், மீன்கள் எல்லாவற்றையும் மாசுபடுத்துகிறது. நம்ம பயன்படுத்தி நம்ம உசுரோட இருக்கும் வரை மக்காம இருக்கிறது ரெண்டே ரெண்டுதான். ஒன்னு நாம செஞ்ச பாவம், இன்னொன்னு இந்த பிளாஸ்டிக். பாவத்தை புண்ணியம் செய்து சரிப்படுத்தலாம். ஆனா இந்த பிளாஸ்டிக்கை என்ன செய்யலாம்?

ஆனால் அதற்கும் ஒரு தீர்வு உள்ளது. பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை விட்டுவிட்டு, நமது தாத்தா, பாட்டி காலத்தில் பயன்படுத்திய மஞ்சப்பையை பயன்படுத்துவது தான். எனவே மீண்டும் மஞ்சப்பை, பிளாஸ்டிக்குக்கு குட்பாய் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்