அரசுக்குடியிருப்பு: பயனாளிகள் தொகைக்கு தவணை வசதி – அரசு அறிவிப்பு ..!

Default Image

தமிழகம் முழுவதும் அரசு குடியிருப்புக்கு பயனாளிகள் செலுத்த வேண்டிய தொகையை 20 ஆண்டுகள் தவணை முறையில் செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புக்கான  பயனாளர்களின் பங்களிப்பு தொகை குறைபட்டுள்ளது. பங்களிப்பு தொகையை நீண்டகால சுலபத் தவணையில் பயனாளிகள் செலுத்தலாம்  என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்களிப்பு தொகை மாதம் 250 முதல் 500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறு கட்டுமான திட்டப்பகுதிகளில் சென்னை மற்றும் இதர நகரங்களில் பங்களிப்பு தொகை மாதம் ரூ.250 எனவும் 60 முதல் 100%க்குட்பட்ட  கூடுதல் குடியிருப்புப் பகுதிகளில் சென்னையில் ரூ. 400, இதர நகரங்களில் ரூ.300 என அரசு தெரிவித்துள்ளது.

30 முதல் 60%க்குட்பட்ட  கூடுதல் குடியிருப்புப் பகுதிகளில் சென்னையில் ரூ. 500, இதர நகரங்களில் ரூ.400 என அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் ரூ.1.50 லட்சம்,  இதர நகரங்களில் ஒரு லட்சத்தை 20 ஆண்டுகளில் தவணைகளில் செலுத்தலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்