தடுப்பூசி சான்றிதழ் இல்லாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது..! – பஞ்சாப் அரசு
பஞ்சாபில், தடுப்பூசி சான்றிதழ் இல்லாவிடில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு வருடமாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், தற்போது ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த ஓமைக்ரான் வகை கொரோனாவானது, தற்போது அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவை பொருத்தவரையில் 200-க்கும் மேற்பட்டோர் ஓமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பஞ்சாபில், தடுப்பூசி சான்றிதழ் இல்லாவிடில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை என்றும், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் கட்டாயம் எனவும் பஞ்சாப் மாநில அரசு தெரிவித்துள்ளது.