சட்டப்பேரவைக்குள் செல்ல கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் – புதுச்சேரி அரசு
இனிமேல் சட்டப்பேரவை வளாகத்தில் வர தடுப்பூசி கண்டிப்பாக செலுத்தியிருக்க வேண்டும் என புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு தேவைகளுக்காகவும் தொகுதி விவகாரங்களுக்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்து செல்கின்றனர். இதுதவிர சட்டப்பேரவையில் உள்ள பல்வேறு அலுவலகங்களில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதனையடுத்து, அரசின் சுகாதாரத்துறை சார்பில் சட்டப்பேரவை நுழைவு வாயிலில் முகாம் அமைக்கப்பட்டிருந்தது. சட்டப்பேரவைக்கு வரும் ஊழியர்கள், அமைச்சர் அலுவலக ஊழியர்கள், பொதுமக்களிடம் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் கேட்டனர். இ
ன்று காலை முதல் சட்டப்பேரவை வளாகத்தில் வருபவர்களிடம் தடுப்பு செலுத்தியதற்கான சான்றுகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டு ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு, அங்கேயே தடுப்பூசி செலுத்தப்பட்டு சான்றிதழ் இல்லாதவர்களை சட்டப்பேரவை வளாகத்தில் அனுமதிக்க மறுத்துவிட்டனர். மேலும், இனிமேல் சட்டப்பேரவை வளாகத்தில் வர தடுப்பூசி கண்டிப்பாக செலுத்தியிருக்க வேண்டும் என புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது.