#BREAKING: கேரள காங்கிரஸ் செயல் தலைவர் காலமானார்!

Default Image

கேரள காங்கிரஸ் செயல் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.டி.தாமஸ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

கேரள காங்கிரஸ் செயல் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.டி.தாமஸ் (வயது 70) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சில உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக அவருக்கு கீமோதெரபி செய்வதில் சிரமம் ஏற்பட்டது. கட்சியினரே தலையிட்டு, அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களிடம் அவரது தொடர் சிகிச்சை குறித்து தகவல் கேட்டனர்.

அவர் குணமடைந்து திரும்பி வருவார் என அனைவரும் நினைத்திருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். PT தாமஸ் கேரள காங்கிரஸ் செயல் தலைவராகவும், 2016 முதல் திருக்ககராவில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகவும், 2009-2014 வரை மக்களவை உறுப்பினராகவும் இருந்தார். காங்கிரஸின் மாணவர் பிரிவான கே.எஸ்.யு-ல் தாமஸ் தீவிர உறுப்பினராக இருந்தார்.

KSU யூனிட்டின் துணைத் தலைவர், கல்லூரி ஒன்றியப் பொதுச் செயலாளர், இடுக்கி மாவட்டத் தலைவர், மாநிலப் பொதுச் செயலாளர், மாநிலத் தலைவர் எனப் பல பதவிகளை வகித்துள்ளார். 1980 முதல் கேபிசிசி மற்றும் ஏஐசிசியில் உறுப்பினராக இருந்து வருகிறார். 1991 மற்றும் 2001 சட்டமன்றத் தேர்தல்களில் தொடுபுழாவில் இருந்தும், 2016 சட்டமன்றத் தேர்தல்களில் திருக்காக்கரையிலிருந்தும் சட்ட மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்