துணை மருத்துவப் படிப்பு – இன்று ஆன்லைனில் தொடங்கும் கலந்தாய்வு!
B.Sc., Nursing, B.Pharm., உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடங்குகிறது.
B.Sc., Nursing, B.Pharm., உள்ளிட்ட 19 துணை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று ஆன்லைனில் இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று சிறப்புப் பிரிவினருக்கும், நாளை முதல் 29-ம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
பிஎஸ்சி நர்சிங் படிப்பில் அரசு கல்லூரியில் 250 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 7,850 இடங்களும் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்கிறது. நாளை மறுநாள், பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெறுகின்றது.
B.Sc., Nursing, B.Pharm., உள்ளிட்ட 19 துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு http://tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் தொடங்குகிறது. இதனிடையே, தமிழகத்தில் பி.எஸ்.சி. நர்சிங், பி.பார்ம், பி.பி.டி., பி.ஓ.டி., பி.எஸ்.சி. ரேடியோகிராபி, ரேடியோதெரபி, பி.எஸ்.சி. கார்டியாக் டெக்னாலஜி உள்ளிட்ட 19 மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
அரசு மருத்துவ கல்லூரிகளில் 2,276 இடங்கள், தனியார் கல்லூரிகளில் 13,832 இடங்களுக்கும் தரவரிசை பட்டியல் வெளியானது. 2021-2022-ஆம் ஆண்டுக்கான மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளுக்கு 16,118 இடங்களில் சேர 64,900 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.