யூடியூப் பார்த்து பிரசவம்! சட்டரீதியான நடவடிக்கை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Default Image

யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறான அணுகுமுறை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்.

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக மருத்துவத்துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளி, கல்லூரிகளில் நோய்த்தொற்று நடவடிக்கைகளை கூடுதல் கவனத்தோடு பின்பற்ற வேண்டும். டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

இதன்பின் பேசிய அவர், யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறான அணுகுமுறை என்றும் இதுகுறித்து சட்டரீதிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதனிடையே, ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த நெடும்புலி புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த இயற்கை மற்றும் மரபுவழி ஆர்வலரான லோகநாதன் தனது மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்க, சமூக வலைதளமான யூடியூப்பை பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.

யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. பிரசவம் பார்த்த கணவன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மனைவி கோமதிக்கு மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்