நாடு திரும்பிய ரபேல் நடாலுக்கு கொரோனா தொற்று உறுதியானது..!

Default Image

அபுதாபியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் Exhibition போட்டியில் விளையாடிவிட்டு நாடு திரும்பிய ரபேல் நடாலுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

நட்சத்திர டென்னிஸ் வீரர் ரஃபேல் நடாலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ரஃபேல் நடால் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை தனது ரசிகர்களுக்கு தெரிவித்தார். அபுதாபியில் நடந்த போட்டியின் ஆட்டத்தில் இருந்து வீடு திரும்பிய ரஃபேல் நடால், கொரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

அபுதாபி போட்டியில் இருந்து திரும்பிய பிறகு  நான் ஸ்பெயினுக்கு வந்தபோது, ​​​​ஆர்டி-பிசிஆர் சோதனை செய்தேன். எனக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டது என்று ரஃபேல் தனது ட்வீட் மூலம் தனது ரசிகர்களுக்கு தெரிவித்தார். தனது உடல்நிலைக்கு ஏற்ப போட்டி மற்றும் அட்டவணையை வரும் நாட்களில் முடிவு செய்வேன் என்று ரஃபேல் நடால் தனது ரசிகர்களிடம் கூறினார்.

ரஃபேல் நடால் தற்போது வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் பரிசோதனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ரஃபேல் நடால் அபுதாபியில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் Exhibition ஆட்டத்தில் முன்னாள் நம்பர் 1 வீரர் ஆண்டி முர்ரேவிடம் தோல்வியை சந்தித்தார்.

ஆண்டி முர்ரே 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ரஃபேல் நடாலை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய ஓபனில் ரபேல் நடால் விளையாடுவது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய ஓபன் ஜனவரி 13 முதல் தொடங்க உள்ளது. கொரோனா வழிகாட்டுதல்கள் காரணமாக ரஃபேல் நடால் அதில் விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்