ஜனவரி-1 ஆம் தேதி முதல் அமேசான் பிரேமில் கிரிக்கெட் நேரலை செய்யப்படும் – அமேசான் அறிவிப்பு

வரும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமேசான் பிரேமில் கிரிக்கெட் போட்டிகள் நேரலையாக ஒளிபரப்பப்பட இருக்கிறது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கு நேரத்தில் ஓடிடி தளங்களில் நேரடியாக திரைப்படங்கள் ஒலிபரப்பப்பட்டு வந்தது. திரைப்படங்கள் மட்டும் ஒளிபரப்பப்பட்டு வந்த ஓடிடி தளத்தில் தற்போது கிரிக்கெட் போட்டிகள் நேரலையாக ஒளிபரப்பப்பட இருக்கிறது.
இதற்காக அமேசான் நிறுவனம், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி வரும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நியூசிலாந்தில் ஆடப்படும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் அமேசான் பிரேமில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. திரைப்படங்களை ரிலீஸ் செய்து வந்த அமேசான் பிரைம் தற்போது கிரிக்கெட் தொடரை நேரடியாக ஒளிபரப்ப உள்ளது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025