ஆஷஸ் 2வது டெஸ்ட் : 275 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ஆஸ்திரேலியா அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தனர். முதலில் இறங்கிய ஆஸ்திரேலியா 2-வது நாள் ஆட்டத்தில் 9 விக்கெட் இழந்து 473 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. மீதம் இருந்த நேரத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது.
சொதப்பலாக விளையாடிய இங்கிலாந்து அணி 84.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 236 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால், ஆஸ்திரேலிய அணி தன்னுடைய 2-வது இன்னிங்ஸை 237 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கியது. சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழந்து 230 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால், இங்கிலாந்து அணிக்கு 468 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது.
நேற்றைய 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 43.2 வது ஓவரில் 4 விக்கெட்டுகள் இழந்து 82 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், இன்று கடைசி மற்றும் 5-வது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியதில் இருந்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க மத்தியில் இறங்கிய கிறிஸ் வோக்ஸ் 44, ஜோஸ் பட்லர் 26 ரன்கள் மட்டும் எடுக்க இறுதியாக இங்கிலாந்து அணி 113.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 192 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
இதனால், இங்கிலாந்து அணியை 275 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் முதல் 2 போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளும் இடையே வரும் 26-ஆம் தேதி 3-வது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.