வலிமை படம் இவ்வளவு பெருசா.?! சென்சார் முடிந்தது.! ரிலீஸ் தேதி சொல்லுங்க படக்குழு.! எங்கும் ரசிகர்கள்.!

Default Image

வலிமை திரைப்படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்று வாங்கியுள்ளதாம். படத்தின் நீளம் 2 மணி நேரம் 50 நிமிடம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்குமார் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. இந்த திரைப்படம் அஜித்திற்கு மிகவும் பிடித்தமான பைக் ரேஸிங் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு விண்ணை முட்டும் அளவிற்கு இருக்கிறது.

இந்த படத்தை வினோத் எழுதி இயக்கியுள்ளார். போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். வலிமை படத்தின் ஒரு அப்டேட்க்காக அஜித் ரசிகர்கள் செய்யாதவை இல்லை என்பது போல செல்லும் இடமெல்லாம் வலிமை அப்டேட் வலிமை அப்டேட் என கூறி படக்குழுவை ஒரு வழி ஆக்கிவிட்டனர்.

கொரோனா பிரச்சனை கொஞ்சம் குறைந்த நேரத்தில் படத்தின் முதல் போஸ்டர், அண்மையில், படத்தின் 2 பாடல்கள், கிளிசம்பஸ் வீடியோ, மேக்கிங் வீடியோ என வெளியாகிவிட்டது.

படம் பொங்கல் 2022 என அறிவித்துவிட்டார்கள். படம் சென்சார் சென்று வந்துவிட்டது. படத்திற்கு U/A சான்று வழங்கியுள்ளனர். படத்தின் நீளம் 2 மணி நேரம் 50 நிமிடம் ஓடும் என தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம் தான் என்றாலும் அதற்கேற்ற கதைக்களமும், சுவாரஸ்யமான திரைக்கதையும் அமைந்தால் படத்தின் நீளம் ரசிகர்களுக்கு தெரிந்துகொள்ளாது பார்க்கலாம் படம் எப்படி இருக்க போகிறது என்று.

பொங்கல் 2022 என அறிவித்த படக்குழு இன்னும் ரிலீஸ் தேதியை உறுதி செய்யாமல் இருக்கிறதாம். பல்வேறு திரையரங்குகள் ஜனவரி 13 என அவர்களது இணையதள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். அனால், படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்