#Breaking:தேர்தல் சட்ட திருத்த மசோதா – மக்களவையில் தாக்கல்
தேர்தல் சட்ட திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும், தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில்,தேர்தல் ஆணையம் 4 வகையான தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர உள்ளதாக கூறப்படுகிறது.
அதில்,குறிப்பாக வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவும் ஒன்று.இதற்கு வ மத்திய அமைச்சரவை கடந்த வாரத்தில் ஒப்புதல் அளித்திருந்தது.
மத்திய அமைச்சரவை கருத்துப்படி,இந்த மசோதா மூலம் ஒருவர் பல வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்பதாகும்.மேலும்,பெண் ராணுவ அலுவலர் வெளியூர் சென்றால் அவருக்கு பதில் கணவர் வாக்களிக்கவும் இந்த மசோதா வழிவகுக்கிறது. ஆனால்,ஆதார் எண் இல்லாதவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படலாம் என்று கூறி ஆபத்தான இந்த தேர்தல் சீர்திருத்த மசோதாவை அனைவரும் எதிர்க்க வேண்டும் சில அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்,மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கான “தேர்தல் சட்ட திருத்த மசோதா” தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரீசீலனைக்கு அனுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவால் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனால்,கடும் அமளி ஏற்பட்டு மக்களவை இரண்டு மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
‘The Election Laws (Amendment) Bill, 2021.’ introduced in Lok Sabha.
House adjourned till 2 pm amid uproar by the Opposition. pic.twitter.com/gIpb0UOfUZ
— ANI (@ANI) December 20, 2021