தனுஷ் சிபாரிசு செய்யும் அந்த ‘இளம்’ இயக்குனர்.! மறுத்த சத்ய ஜோதி பிலிம்ஸ்.!
இயக்குனர் இளன் கூறிய கதை தனுஷிற்கு மிகவும் பிடித்துபோனதாம். அதனால், அதனை தயாரிக்க மற்ற தயாரிப்பார்களிடம் கூறி சிபாரிசு செய்கிறாராம்.
ஹரிஷ் கல்யாண், ரைசா வில்லியம்சன் நடித்து யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து இருந்த திரைப்படம் பியர் பிரேமா காதல். இந்த படத்தை இளன் எனும் அறிமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் ஹரிஷ் கல்யானை வைத்து ஸ்டார் எனும் திரைப்படத்தை தொடங்கினார். அனால், சில காரணங்களால் அந்த படம் டிராப் ஆனது.
அதன் பின்னர், இயக்குனர் இளன், தனுஷிடம் கதை கூறி ஓகே செய்து வைத்திருந்தார். தனுஷிற்கு அந்த கதை மிகவும் பிடித்துப்போனதாம். முதலில் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அந்த படத்தை தயாரிக்க இருந்தது.
ஆனால், கதை பிடித்திருந்தாலும், இளன் கூறிய பட்ஜெட்டிற்கு தயாரிப்பு தரப்பு மறுத்துவிட்டதாம். அதனால், தனுஷே வேறு தயாரிப்பாளர்களுக்கு சிபாரிசு செய்து வருகிறாராம். அந்த வகையில், சினிமா பைனான்சியர் மதுரை அன்புவிடம் தனுஷ் சிபாரிசு செய்த்துள்ளாராம். கதை நன்றாக இருக்கிறது. படம் தயாரியுங்கள் நிச்சயம் வெற்றிபெறும் என கூறியுள்ளாராம். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.